தரகம்பட்டி டாஸ்மார்க் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.
கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாகராசுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நவம்பர் 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் தரகம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இந்த மது விற்பனையில் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, மேல பகுதி, பேரணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு மகன் முருகன் வயது 50 என்பவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
மேலும் , அவர் விற்பனைக்கு வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, முருகன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.