செம்மண் கடத்தல் பாலவிடுதி காவல் நிலையம் முற்றுகை

66பார்த்தது
கரூர் மாவட்டம், கடவூர் அருகே மாவத்தூரில் இன்று உரிய அனுமதியின்றி ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இரண்டு டிப்பர்களில் செம்மண் கடத்தப்பட்டதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறை பிடித்து பாலவிடுதி போலீசார் வசம் ஒப்படைத்தனர்.

ஆனால், போலீசார் அந்த இரண்டு லாரிகளையும் விடுவித்ததால் பொதுமக்கள், பாலவிடுதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சுமார் மூன்று மணி நேரமாக பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக பாலவிடுதி காவல் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை வழக்கு பதிவு செய்து புகார் மனு ஏற்பு ரசீது நகல் வழங்கியதை அடுத்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

கடவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி