அமைச்சூர் கபடி கழகத்தில் சார்பில் பாராட்டு விழா

51பார்த்தது
கிருஷ்ணகிரியில் உள்ள போச்சம்பள்ளியில் ஜன. 25 முதல் ஜன. 27ம் தேதி வரை நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி, மாநில அளவில் மூன்றாவது பெற்றதற்காக இன்று கரூர் புலியூர் கவுண்டம்பாளையம் எம்ஏஎம் ராமசாமி செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா கரூர் மாவட்ட அமைச்சூர் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 12ஆம் தேதி இன்று நடைபெற்றது.

பாராட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கபடி கழகத்தின் தலைவர் சி பி அன்புநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கபடி வீரர்களை பாராட்டி, கௌரவித்தார்.

மேலும் கபடி வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூபாய் 3000 விதம் 17 பேருக்கு ரூ 51, 000 வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேசிய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணியில் தேர்வாகி விளையாடிய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் ஷாலினி ஆகியோரை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கபடி கழகத்தின் சேர்மன் ஏ எஸ் தண்டபாணி, செயலாளர் நல். சேதுராமன், பொருளாளர் ஆர் நாகராஜன் பயிற்சியாளர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி