கரூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு

2592பார்த்தது
கரூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் வருடம் தோறும் நடத்தி, சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வது வழக்கம். நடப்பாண்டுக்கான சங்கத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி வேட்பு மனு தாக்கலுடன் துவங்கியது. வழக்கறிஞர்கள் சங்கத்தில் மொத்தம் 601- பேர் உறுப்பினராக உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் வழக்கறிஞர் மாரப்பன் தலைமையிலான அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தொடர்ந்து அவரே தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மீண்டும் இம்முறை வழக்கறிஞர் மாரப்பன் தலைமையிலான அணி போட்டியிடுகிறது. இவரது அணியில் தலைவராக மாரப்பன், செயலாளராக நகுல்சாமி, துணைத்தலைவராக தர்மசேனன், மற்றொரு துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் நாகேஸ்வரன், இணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இவர்களை எதிர்த்து செல்வகுமார் தலைவராகவும், செயலாளராக தனசேகரன், பொருளாளராக ராஜேஷ்குமார், துணைத் தலைவராக மணிகண்டன், இணை செயலாளராக ஜோதி சுதர்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 9 மணி அளவில் துவங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெற்று இன்று இரவே வெற்றி பெற்றவர்கள் நிலவரம் குறித்து அறிவிப்பு செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி