தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பிரதான நுழைவாயில் வழியாக மட்டுமே உள்ளே செல்லவும், வெளியே வரவும் பயன்படுத்த வேண்டும் எனவும், இதர வாயில்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
உத்தரவை தொடர்ந்து, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப் படுத்தியதை கண்டித்து, கரூர் வழக்கறிஞர் சங்கம் சார்பாக நேற்று (செப்.5) வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று செப்டம்பர் 5ஆம் தேதி இன்று செப்டம்பர் 6ஆம் தேதி காலை 11 மணி முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என தீர்மானித்து, அதன்படி நீதிமன்ற புறக்கணிப்பை செய்துள்ளனர் வழக்கறிஞர்கள்.
இந்த விஷயத்தில் கரூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், முதன்மை சார்பு நீதிபதியும் எதோச்சதிகாரமாக செயல்படுவதாக ஒரு சாரார் வழக்கறிஞர்கள் கருதி, இந்த நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
நேற்று(செப்.5) நடைபெற்ற கூட்டத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் நகுல்சாமி, மற்றொரு துணைத்தலைவர் தர்மசேனன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மேற்கண்ட தீர்மானத்தை இயற்றியுள்ளனர்.