ராஜ கன்னிமார் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா.

73பார்த்தது
கோடந்தூர், அருள்மிகு ராஜ கன்னிமார் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,
கோடந்தூரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருளப்பட்டதால் காளியம்மன் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட
பாலமர இராஜ கன்னிமார் ஆலயம் உள்ளது.

இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று
குடமுழுக்கு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கன்னிமார் சாமிக்கு பால், சந்தனம், இளநீர், திருமஞ்சனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த யாக வேள்வியில் யாகம் வளர்க்கப்பட்டது.


பின்னர் சாமிக்கு மகா தீபாரணையும் நடைபெற்று, அனைவருக்கும் கன்னிமார்சாமிகள் அருள் ஆசி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் காளியம்மன் கோயில் பாத்தியப்பட்ட பங்காளிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற
அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி