கரூரில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

1073பார்த்தது
கரூரில் பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை

கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முனியப்பன் கோவில் தென்புறம் பகுதியில் சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி, பாரதியார் தெரு பகுதியில் 5. 50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணி, மில்கேட் தென்புறம் பகுதியில் 6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி, ஆத்தூர் பிரிவு தென்புறம் பகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி, வேப்பம்பாளையம் பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, மொச்சக்கொட்டம் பாளையத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜையை தாந்தோணி மேற்கு ஒன்றியம் திமுக கோயம்பள்ளி பாஸ்கர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி