தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிய முதியவர் கைது.

56பார்த்தது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கிய முதியவர் கைது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த முதியவர் கைது.

கரூர் மாவட்டம், தாந்தோணி மலை காவல் எல்லைக்குட்பட்ட, ராயனூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லை கராசிக்கு தகவல் கிடைத்தது.


இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை 10: 30 மணி அளவில் ராயனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.


இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அந்த முகாமில் வசித்து வரும் சின்னவன் என்கிற ஆண்டனி முத்து வயது 62 என்பவர் தடை செய்யப்பட்ட 9- ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக ஆண்டனி முத்துவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி