காலை சிற்றுண்டி உணவு திட்டத்தினை துவக்கி வைத்த எம் எல் ஏ

50பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி இணை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரணியமங்கலம் ஊராட்சி வலையப்பட்டி தனம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு விரிவாக்க திட்டத்தினை எம்எல்ஏ மாணிக்கம் துவக்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி உணவுகளை பரிமாறி மேலும் குழந்தைகளுடன் தானும் அமர்ந்து உணவருந்தினார்.

அதனைத் தொடர்ந்து வளையப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 11. 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும், வளையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில் ரூபாய் 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறு பாலத்தினையும் எம்எல்ஏ மாணிக்கம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின்போது வளையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சரவணன், திமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன், புலிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி