

கரூர்: மாநில செயற்குழு கூட்டம்; கட்சிகொடி ஏற்றி வைத்து கொண்டாட்டம்
கரூரில், புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து கொண்டாட்டம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரேம் மஹாலில் இன்று புரட்சி பாரதம் கட்சியின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க கரூருக்கு வந்த கட்சியின் தலைவரும், கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூவை ஜெகன் மூர்த்திக்கு கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணி மலை மற்றும் லைட் ஹவுஸ் பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து கட்சியினரை உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் பரணி மணி, மாநில முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் பெரியசாமி, கரூர் மாவட்ட செயலாளர்கள் செல்லமுத்து, தேவராஜ், சேகர், அறிவுமதி, மற்றும் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு கொடி ஏற்ற நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.