கரூர் மாவட்டத்தில் நிகழும் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டதன் பேரில், செப்டம்பர் 25ஆம் தேதி இரவு கரூர் மாவட்டம், கரூர்- கோவை சாலையில் உள்ள தென்னிலை நான்கு ரோடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர்கள் பிரியதர்ஷினி தலைமை காவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மறுநாள் செப்டம்பர் 26 ஆம் தேதி அதிகாலை நான்கு மணி அளவில் பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை சோதனை செய்ய இடை மறித்தனர்.
ஆனால், டூவீலரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்று, டூ வீலரை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
அப்போது அவர்களுக்கு கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
பிறகு, இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணன் மற்றும் ஆனந்தன் என்பதும், அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர் காவல்துறையினர்.