புகலூர் & முதலியார் வாய்க்கால்களில் தூர்வார ஆட்சியரிடம் மனு.

62பார்த்தது
புகலூர் மற்றும் முதலியார் வாய்க்கால்களில் தூர்வார மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினர்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர் கூட்டத்தில், கரூர் மாவட்ட தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கரூர் மாவட்டம் புகலூர் வாய்க்கால் மற்றும் பாப்புலர் வாய்க்களை நம்பி விவசாயிகள் கோரை, தென்னை மற்றும் கொடிக்கால் பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு, பொதுப்பணித்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏப்ரல் கடைசி வரை தண்ணீர் விட வேண்டும் என தீர்மானம் போட்டனர்.

தீர்மானம் போட்டபடி தண்ணீர் விடாமல் செய்தனர்.

தற்போது இரண்டு வாய்க்கால்களிலும் தூர் வாராமல் உள்ளது.

இதனால் விவசாயத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல முடியாமல் உள்ளது. எனவே முறையாக வாய்க்கால்களை தூர்வாரி விவசாயிகளையும், பயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி