கரூர் மாவட்டம் க. பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை கீழ் செயல்படும் சமக்கர சிக்க்ஷாவுடன் இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றத்திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, பிற உதவிகளுக்கான விண்ணப்பம் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் க. பரமத்தி வட்டார வளமைய மேற்பார்வையாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் முரசொலி, மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர் ராதா, வட்டார கல்வி அலுவலர் அசோகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த முகாமில் கண், காது மூக்கு மருத்துவர்,
மூளை, முடக்குவாத நிபுணர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பை அறிந்து எத்தனை சதவீதம் அவர்களுக்கு பாதிப்பு உள்ளது என்பது தொடர்பான அறிக்கை அளிப்பதன் மூலம், அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் அவர்கள் பெற முடியும்.
இந்த நிகழ்ச்சியில்
க. பரமத்தி சுற்று வட்டார பகுதியில் பயிலும் 18 வயது உட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தங்கள் பெற்றோருடன் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.