ரெத்தினம் பிள்ளை புதூரில் மகா கும்பாபிஷேக விழா

57பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் ஊராட்சி ரெத்தினம்பிள்ளை புதூரில் செல்வமுத்து மகா மாரியம்மன், வலம்புரி விநாயகர், பிடாரி மண்டு, மலையாளி, மதுரை வீரன், கொலைகார முத்தையன் ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புணரமைத்து கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து கோவில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தற்போது கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.

இன்று காலை நான்காம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க

வேத மந்திரங்கள் மூலம் புனித நீரை கலசத்திற்கு ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

ரெத்தினம் பிள்ளை புதூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள ராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி