கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆண்டிப்பட்டி கோட்டை அருகே உள்ள திருக்கோணம் கிராமத்தில் உள்ள காடிப்பட்டியில் அமர்ந்து அருள் பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்,
ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதி காலையில் மங்கள இசை உடன் துவங்கியது.
பிறகு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மூல மந்திரஹோமம், மால மந்திர, காயத்ரி மந்திர,
ஜெப ஹோமங்கள், விசேஷசாந்தி, தசாவதார மகாவிஷ்ணு ஹோமம், நாடி சந்தானம் மற்றும் 216 வகையான ஹோம திரவிய ஹோமங்கள் நடைபெற்று, யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர்.
பின்னர் மூலவருக்கு மகா தீபாரணையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.