சிறுநீரகத்தில் கல்- வயிற்று வலியால் தூக்கிட்டு தற்கொலை.

61பார்த்தது
பெரிய காட்டு தோட்டம்- சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டதால் விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சேந்தமங்கலம் அருகே உள்ள பெரிய காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சேகர் வயது 39.

இவர் கடந்த இரண்டு வருடங்களாக சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளையும் அவர் மேற்கொண்டார்.

ஆயினும் அவருக்கு குணமாகவில்லை. மேலும், ஜூலை 27 ஆம் தேதி இரவு 7 மணியளவில் திடீரென வயிற்றில் வலி ஏற்பட்டதால், வலி தாங்க முடியாமல் விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

இதனை அறிந்த அவரது மனைவி வளர்மதி, உடனடியாக தனது கணவர் சேகரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக வளர்மதி அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சேகரின் உடலை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி