கரூர்-தொடக்க கல்வி முடித்த மாணாக்கர்களுக்கு பட்டமளிப்புவிழா

80பார்த்தது
கரூரில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் தொடக்க கல்வி முடித்த மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா.


கரூர் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் செயல்படும் சைதன்யா டெக்னோ பள்ளியில் தொடக்கநிலை கல்வியினை முடித்த ஐந்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வடிவுக்கரசி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியில் தாளாளர் வெங்கடகிருஷ்ண ரெட்டி முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் 230 பேருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

பட்டங்களை பெற்றுக் கொண்ட மாணாக்கர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் கங்கேஸ்வரி, ராஜேஸ்வரி, ப்ரீத்தி ஆகியோர் மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி