கேஸ் சிலிண்டர் 500, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு-MLAவிளக்கம்

57பார்த்தது
கேஸ் சிலிண்டர் 500, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு-கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். எம்எல்ஏ விளக்கம்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கேர் நகர், அண்ணா நகர், சௌந்தராபுரம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ இளங்கோ.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய எம் எல் ஏ இளங்கோ, எம்எல்ஏ என்ற முறையில் இந்த பகுதிக்கு தேவையான நிறைய திட்டங்களை செய்து முடித்துள்ளேன்.

மேலும், பொதுமக்கள் போர்வெல் அமைத்து தரவும், தார் சாலைகள் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர், தேர்தல் முடிந்த பிறகு அந்த பணிகளையும் முடித்து தருவேன் என உறுதி அளிப்பதாக தெரிவித்த அவர், இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு கேஸ் சிலிண்டர் விலை 500க்கும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்வேன் என தலைவர் உறுதியளித்து உள்ளார் எனவே அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களித்து ஜோதி மணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி