நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்; பரபரப்பு

74பார்த்தது
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. நேற்று (செப்.,30) பள்ளப்பட்டியில் நகர மன்ற கூட்டம் முனவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 12 பெண் கவுன்சிலர்கள், 12 ஆண் கவுன்சிலர்கள் கலந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென 24, 27 வார்டு பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் குடிநீர் சரியான முறையில் வருவதில்லை எனவும், பள்ளப்பட்டி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த இதுவரை இந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜானை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தண்ணீர் வசதிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானமாக நிறைவேற்றிய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பள்ளப்பட்டி நகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி