மக்கள் திரையரங்கம் அருகே மரம் முறிந்து விழுந்ததால் பாதிப்பு.

57பார்த்தது
மக்கள் திரையரங்கம் அருகே மரம் முறிந்து விழுந்ததால் பாதிப்பு.
மக்கள் திரையரங்கம் அருகே மரம் முறிந்து விழுந்ததால் பாதிப்பு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நேற்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கிடையே கடந்து சென்றனர்.

அப்போது அரவக்குறிச்சி-கரூர் செல்லும் சாலையில், மக்கள் திரையரங்கம் எதிரே இருந்த ஒரு பெரிய வேப்ப மரத்தில் ஒரு கிளை முறிந்து சாலையில் விழுந்தது.

மரக்கிளை ஒடிந்து விழும்போது, சாலையில் யாரும் கடந்து செல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதே சமயம் மரக்கிளை சாலையை இடைமறித்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை நின்றதும், பொதுப்பணித்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள், சிறிது நேரத்தில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

அதுவரை காத்திருந்த வாகனங்கள் பின்னர் புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்தி