தளவாபாளையம்- டூவீலர் சென்டர் மீடியனில் மோதி இளைஞர் உயிரிழப்பு.
தர்மபுரி மாவட்டம், பாலகோட்டை,
எண்டபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமர் மகன் தவமணி வயது 23.
இதே போல தர்மபுரி மாவட்டம், பென்னாகரம்,
கிட்டன்னஹள்ளி, நாகமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக மகன் கணேசன் வயது 23.
இருவரும் இவர்களது டூவீலரில் கரூர் - சேலம் சாலையில் அக்டோபர் 12ம் தேதி காலை 6: 20 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.
டூவீலரை தவமணி ஓட்ட, கணேசன் பின்னால் அமர்ந்து சென்றார்.
இவர்களது வாகனம் தளவாய்பாளையம் குமாரசாமி கல்லூரி அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கணேசன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.
அதே சமயம் டூ வீலரை ஓட்டிய தவமணிக்கு இடது கை, இடது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் அறிந்த கணேசனின் தாயார் முனியம்மாள் வயது 43 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த கணேசனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தவமணியை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ா
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.