அய்யம்பாளையத்தில் கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு ராடுகளை களவாடியவர் கைது.
அரியலூர் மாவட்டம், ஆலாத்திபாளையம் பகுதியில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் வயது 29. இவர் சிவில் இன்ஜினியர் ஆக எம்சிசி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
எம் சி சி நிறுவனம் தற்போது கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா அய்யம்பாளையம் பகுதியில், பாப்புலர் முதலியார் வாய்க்கால் செல்லும் பாதையில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான பணிக்காக ரூபாய் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 120 கிலோ எடை கொண்ட, இரும்பு ராடுகளை வாங்கி வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஜூலை 25ஆம் தேதி மாலை 4 மணி அளவில், கரூர், புகலூர் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் வயது 63 என்பவர் இந்த இரும்பு ராடுகளை களவாடி சென்றுள்ளார்.
இது தொடர்பாக சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இரும்பு ராடுகளை களவாடிய நடராஜனை கைது செய்து, அவரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.