பழனி ஞான தண்டாயுதபாணி கோவில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு.

50பார்த்தது
கரூர் அருகே அகிலாண்டபுரத்தில் அருள்மிகு பழனி ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


கரூர் மாவட்டம்,
அரவக்குறிச்சி அருகே உள்ள அகிலாண்டபுரத்தில், அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு, நேற்று ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் சிறப்பு பூஜை மற்றும் 18 சித்தர்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கரூர். கோவை ஈரோடு. திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நள்ளிரவு 12 மணி அளவில், 18 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

18 சித்தர்களின் யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.


இது குறித்து கோவில் நிர்வாகி பூபதி செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்ன வரம் கேட்டு வந்து இறைவனை வணங்கி சென்றால் அவர்களுக்கு 12 மாத காலத்திற்குள் நிறைவேறி வருவதாகவும் இதனை கேள்விப்பட்ட தேர்தல் பொதுமக்கள் தொடர்ந்து கோவிலுக்கு வந்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி செல்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி