குளத்தூர்பட்டியில் மாடு மேய்த்தபோது, பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரி,
மேலகொளத்தூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 70. இவர் விவசாயி.
வேலுச்சாமி தனது மாடுகளை அக்டோபர் 19ஆம் தேதி காலை 7 மணி அளவில் வழக்கம்போல், கொளத்தூர் பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த பாம்பு ஒன்று வேலுச்சாமியை கடித்துள்ளது. இந்த சம்பவம் அறிந்த வேலுச்சாமியின் மகன் மகாலிங்கம் வயது 45 என்பவர் தனது தந்தையை உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த வேலுச்சாமி, அக்டோபர் 21ஆம் தேதி காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எனவே, சம்பவம் குறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த வேலுச்சாமி உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
க. பரமத்தி காவல்துறையினர்.