கரடிபட்டி- பேரனுடன் டூவீலரில் சென்ற மூதாட்டி கீழே விழுந்து உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பொன்நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி ரத்தினம்மாள் வயது 69. இவரது மகள் ஜோதி வயது 40. ஜோதியின் மகன் கார்த்திக் வயது 20.
அக்டோபர் 5-ம் தேதி காலை 10 மணி அளவில், அரவக்குறிச்சி - கரூர் சாலையில், கார்த்திக் தனது பாட்டி ரத்தினம்மாளை பின்னால் அமர வைத்து டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவர்கள் சென்ற வாகனம் கரடிப்பட்டி அருகே சென்றபோது, வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, வாகனம் நிலை தடுமாறியது.
அப்போது ரத்தினம்மாள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ரத்தினம்மாள் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த ரத்தினமாளின் மகள் ஜோதி அதிர்ச்சி அடைந்ததோடு, காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ரத்தினம்மாளின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து ஏற்பட காரணமான உயிரிழந்த ரத்தினம்மாள் பேரன் கார்த்திக் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.