அப்துல்கலாம் 93வது பிறந்த நாள்-சிலம்பத்தில் சாதனை நிகழ்ச்சி.

75பார்த்தது
தளவாய்பாளையத்தில் அப்துல் கலாம் 93வது பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பத்தில் சாதனை நிகழ்ச்சி.


கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, தளவாய் பாளையம் பகுதியில் செயல்படும் குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில், கரூர் மாவட்ட அமெச்சூர் சிலம்ப சங்கம், பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளி, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிலம்பத்தில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவன தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 450 பேர் பங்கேற்றனர்.
இதில் 9- வயதுடைய மாணாக்கர்கள் தொடர்ந்து இடைவிடாமல் 1: 15 மணி நேரமும்,

9 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2: 15- மணி நேரமும் சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தனர்.

மேலும், சைக்கிளிங் செய்தவாறு சிலம்பம் சுழற்றியும், ஸ்கேட்டிங் செய்தவாறு சிலம்பம் சுழற்றியும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
32 மாணாக்கர்கள் முட்டை மீது நின்றும்,
சட்டத்தில் பொருத்தப்பட்ட
ஆணிகள் மீது நின்று கொண்டும், ஐஸ் கட்டி மீது நின்று கொண்டும் சிலம்பங்களை சுழற்றி சாதனை செய்தனர்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத் தலைவர் ஜெட்லி பங்கேற்று, இந்த சாதனை நிகழ்ச்சியை பதிவு செய்வதாக அறிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி