திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 52). இவரது மனைவி வெண்ணிலா (வயது 42). இவர்கள் இருவரும் செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 9: 30- மணி அளவில், திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.
இவர்களது வாகனம் கரூர் மாவட்டம், மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, பாலசுப்பிரமணியன் தனது டூவீலரை வேகமாக இயக்கியதால், அப்பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டு வாகனத்துடன் கீழே விழுந்தனர்.
இதில் பாலசுப்பிரமணியன் இவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, கரூர் மாவட்டம், வெங்கமேடு, பட்டவன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல் (வயது 25) என்பவர் அளித்த புகாரில், நேரில் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் காயம் பட்ட கணவன்-மனைவி இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அடையாளம் தெரியாத முதியவரை, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.