இழப்பீடு கேட்டு 5-வது நாள் உண்ணா விரத போராட்டம். பரபரப்பு.

66பார்த்தது
இழப்பீடு கேட்டு 5-வது நாள் உண்ணா விரத போராட்டம். ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் 2-வது நாளாக ஈடுபட்ட விவசாயிகள்.

கரூர் மாவட்டம், ஆண்டி செட்டிபாளையம் முதல் தென்னிலை கரைத்தோட்டம் வரை 110 கேவி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால் நிறுவப்பட்ட மின் பாதை செல்லும் வழியில் அமைக்கப்பட்ட, மின் கோபுரத்துக்கான முழுமையான இழப்பீட்டை வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில், அவரது தோட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை முன்னெடுத்து உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.


இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து ராணிப்பேட்டை தேவராஜ், வேலாயுதம்பாளையம் சின்னசாமி, லாலாபேட்டை கார்த்திகேயன், மீனாட்சி வலசை சேர்ந்த ராதாமணி ஆகிய விவசாயிகள் நேற்று முதல் ராஜாவுடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்வதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி