
மேல்புறம்: பா ஜ சார்பில் அம்பேத்கர் பிறந்த தினம்
விளவங்கோடு தொகுதி, மேல்புறம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், மேல்புறம் சந்திப்பில் அம்பேத்கர் திரு உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மேல்புறம் தெற்கு ஒன்றிய ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் வர்த்தக பிரிவு செயலாளர் சுகுமாரன், பிரச்சார பிரிவு முன்னாள் செயலாளர் சுஜித் பாபு, ராஜேந்திர பிரசாத், ஒன்றிய துணைத் தலைவர் திலீப்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பன், லதா, பொருளாளர் கங்காதரன் நிர்வாகிகள் செல்வி, ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.