ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி ரிலீஸான படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் நடிகை பிரியா வாரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சிம்ரனின் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றி விழாவில், ரசிகர்களுக்காக சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியர் நடனமாடியுள்ளார்.