கன்னியாகுமரி மாவட்டம்
களியக்காவிளை ஆர். சி தெருவில் குப்பையில் வீசி எறியப்பட்ட 34 ரேஷன் அட்டைகளை இன்று பேருராட்சி தூய்மைப் பணியாளர்கள் பேருராட்சியில் ஒப்படைத்தனர். களியக்கா விளை பேருராட்சி தூய்மை பணியாளர்கள் புலமாடன், மேபல்ராணி உள்ளிட்டோர் ஆர். சி. தெருவில் தூயமை பணி மேற்கொண்டனர். அப்போது ஒரு பர்ஸ் காணப்பட்டது. அதனை எடுத்து பார்த்த போது அதில் 34 குடும்ப அட்டைகள் இருந்தது. இவை அனைத்தும் தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் ஆகும். இதில் 24 குடும்ப அட்டைகள் கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட குடும்ப அட்டைகள் ஆகும். 10 குடும்ப அட்டைகள் களியக்காவிளை, மாங்கோடு போருராட்சிக்குட்பட்டது ஆகும். தூய்மை பணியாளர்கள் இதனை களியக்காவிளை பேருராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.