கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே 5- பிள்ளைகள் இருந்தும் அனாதையாக விடப்பட்ட மூதாட்டி நேற்று (20.02.2024) உயிரிழந்தார். அவரது உடலை சொந்த இடத்தில் அடக்கம் செய்ய மருமகள் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் சடலத்துடன் போராட்டம் நடத்துவோம் என ஊர் மக்கள் திரண்டரைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.