களியக்காவிளை அருகேயுள்ள பனச்சக்குழியில் நாசரேத் மக்கள் நலச் சங்க ஆண்டுவிழா நேற்று நடந்தது
விழாவுக்கு கோர் எப்பிஸ்கோப் பிரேம்குமார் தலைமை தாங்கினார். சுனில்குமார் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் வினு ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் அருட்பணி. ஜஸ்ட்டின், சமூக சேவகர் ராஜேந்திரபாபு, களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், கவுன்சிலர் சுனிதா, ஜாண்றோஸ், ஷெர்லின், ஜோஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். லிஸ்பின் போஸ் நன்றி கூறினார்.
விழாவில் ஆதரவற்ற ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.