மார்த்தாண்டம்: குப்பைகளை சாலையில் கொட்டிய கடைகளுக்கு அபராதம்

58பார்த்தது
மார்த்தாண்டம்: குப்பைகளை சாலையில் கொட்டிய கடைகளுக்கு அபராதம்
குழித்துறை நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளிலும் தினசரி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாகனங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இவைகள் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. 

இதற்காக ஷெட் கட்டப்பட்டு உயர்தரமான மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை ரோட்டில் கொட்டக்கூடாது என குழித்துறை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை மீறி மார்த்தாண்டத்தில் குப்பைகளை ரோட்டில் கொட்டிய நான்கு கடைகளுக்கு சுகாதார அதிகாரி ராஜேஷ் குமார் தலைமையிலான ஊழியர்கள் சென்று ரூ.11,000 அபராதம் விதித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி