மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள் படுமோசமாக காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பதுங்கிவிட்டாலுமூடு, குழித்துறை, தக்கலை போன்ற பகுதிகளில் மரணக்குழிகளாக காணப்படுகிறது.
படுமோசமான இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் முன்பு நேற்று (16ஆம் தேதி) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் ஆர் டி சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தர்மராஜ், எம் ஆர் காந்தி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், குழுத்துறை நகர தலைவர் சுமன், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் பிஜு, ரத்தினமணி, ஜெயந்தி, மினி குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.