மண்டைக்காடு: கோயில் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும், கோயிலை தினமும் சுத்தம் செய்து அம்மன் புனிதத்தை காக்க வழி செய்தல் வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோயில் அருகே நேற்று (15-ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர்கள் ராஜா, வினில், ஒன்றிய தலைவர் மணிகண்டன், கிள்ளியூர் ஒன்றிய தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், இந்து இயக்கத்தினர், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி