அடைக்காக்குழி: கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

66பார்த்தது
கொல்லங்கோடு அருகே அடைக்கக்குழி பகுதி முகிலன் தரை என்ற இடத்தில் தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு அம்மன், கணபதி, சிவன் சன்னதிகள் உள்ளன. நேற்று முன்தினம்  (நவம்பர் 27) இரவு அம்மன் சன்னதியில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால், சிவன் சன்னதி கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து சென்றுள்ளனர். 

நேற்று  (நவம்பர் 28) காலை பக்தர்கள் கோயிலுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தை கண்டனர். இது சம்பந்தமாக கோவில் நிர்வாக அதிகாரி சேது மாதவன் என்பவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி