விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று (6-ம் தேதி) காட்டாத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை தடுத்து நிறுத்தியும், வாகனம் நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். வாகனத்தை சோதனை செய்த போது அதில் 750 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இந்த மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. வாகனம் மற்றும் மண்ணெண்ணையை பறிமுதல் செய்த அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.