குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த முழகுமூடு பகுதியை சேர்ந்தவர் றோசி( 50) மீன்வியாபாரி, இவர் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள ஓலா எலக்ட்ரிக் இருசக்கர வாகன கடையில் இருந்து புதிய பைக் ஒன்றை வாங்குவதற்க்காக ரூ. 50000 செலுத்தி உள்ளார் ஆனால் பைக் கிடைக்கவில்லை, இந்நிலையில் இருசக்கர வாகனத்திற்கான கடன் மாதத்தவணையை ஜனவரி 3 -ம் தேதி கட்டும்படி வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த றோசி வாங்காத பைக்குக்கு தணையா? என்ற ஆத்திரத்தில் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது அவர்கள் றோசியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த றோசி புதிய பூட்டு ஒன்றை வாங்கிகொண்டு கடையை பூட்டி கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.