கனரக லாரிகள் இயக்க தடை

7397பார்த்தது
கனரக லாரிகள் இயக்க தடை
குமரி மாவட்டம் வழியாக கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று பல் வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து குமரி மாவட்ட கலக்டர் ஸ்ரீதர் அலுவலகத்தில் சிறு கூட்டரங்கில் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கன ரக லாரிகள் ஒடுவதை முறைப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் குமரி மாவட்ட ரோடு வழியாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாறிகளுக்கு நேற்று பிப்ரவரி 20-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கனிம வள சரக்கு , காலி வாகனங்கள் இரவு 9- மணி முதல் காலை 6 - மணி வரை மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.

கனிம வளங்களை ஏற்றிச் செ ல்லும் சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் 10 - மணி வரை மற்றும் பிற்பகல் 3- மணி முதல் இரவு 8 மணி வரை தவிர பிற நேரங்களில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் உள்ளே வரக்கூடாது என மாவட்ட கலக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவு நேற்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து. நேற்று காலை கேரளாவில் இருந்து குமரி மாவட்ட எல்லை களியக்காவினை வந்த கனரக லாரியினை போலீசார் திருப்பி அனுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி