கன்னியாகுமாரி மாட்டம்
ஆற்றூர் மரியா ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின், இலவச ஆயுர்வேத மருத்துவ மையம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்வுக்கு உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவி பமலா தலைமை தாங்கினார். மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதன்மை மருத்துவர் டாக்டர். விஜய ராகவன் மையத்தை துவங்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். " உண்ணாமலைக்கடை பேரூராட்சியுடன், மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் இந்த இலவச மருத்துவ மையத்தில் வியாழக்கிழமைகளில் காலை 9. 30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை பொதுமக்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்" என கல்லூரி தாளாளர் டாக்டர். ரசல்ராஜ் தெரிவித்தார்.