கன்னியாகுமாரி மாவட்டம்
தோவாளை சானல் கரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் வாழை தோட்டத்தில் புகுந்து 500 வாழை மரங்கள் மற்றும் நான்கு தென்னை மரங்களை நாசப்படுத்தியது. ஏழு பேர் கொண்ட வனத்துறையின் கிராம மக்கள் உதவியுடன் யானை கூட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.