குழித்துறை: ஆற்றின் தரைப்பாலம் மூழ்கியது;  போக்குவரத்து தடை

75பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து இன்று (27-ம் தேதி)  ஐந்தாவது நாளாக மழை பெய்து வருகின்றன. தொடர் மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நேற்றைய தினம் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை அபாய அளவான 44அடியை தாண்டியதால் 500 கன அடி உபரி நீர் திறக்கபட்டது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணை அபாய அளவான 16 அடியை எட்டியதால் 200கன அடி உபரி நீர் திறக்கபட்டது. ஏற்கனவே மழை காரணமாக ஆறுகள் கரை புரண்டு ஓடியதால் ஆறுகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
உபரி நீர் திறப்பு காரணமாக மேலும் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அந்த தடை நீடிக்கபட்டிருப்பதோடு ஆறுகளின் தாழ்வான பகுதியான முவாற்றுமுகம், சிதறால், திக்குறிச்சி, ஞாறாம்விளை, மங்காடு, பார்த்திவபுரம், வைக்கலூர் போன்ற தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த பட்டு உள்ளது.
குழித்துறை தரைப் பாலத்திலும் மூன்றாவது  நாளாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, இரு புறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்க பட்டு வருகின்றன. மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சூழ்நிலை நீடிக்கிறது

தொடர்புடைய செய்தி