சாலையோரம் நின்ற கார் மீது சொகுசு கார் மோதி விபத்து

2232பார்த்தது
சாலையோரம் நின்ற கார் மீது சொகுசு கார் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் சாலையோரமாக நின்ற கார் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், கார் மின் கம்பத்தில் மோதி சேதம் அடைந்துள்ளது.

கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சார்த்தவர் ரெஜின். நேற்று இவர் தனது காரில் நாகர்கோவில் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து நெய்யாற்றின்கரை செல்ல காரில் புறப்பட்டார். கார் குழித்துறை பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக நிறுத்தப்பட்டிருந்து கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தானாக உருண்டு மின் சம்பத்தில் மோதியது. இதில் நிறுத்தப்பட்டிருந்த காரின் முன் பக்கம் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.  இது குறித்து களியக்கவிளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.