அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு அமல்படுத்த உள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும். இதற்கான பாடத்திட்ட மாற்றத்திற்கான பணிகள் இன்னும் 15 நாட்களில் நிறைவடையும் என உறுதியளித்துள்ளார்.