பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், நடிகை லாஸ்லியா இணைந்து நடித்த "மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்" திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பிக் பாஸ் ரயான் மற்றும் இயக்குநர் இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திரைப்படம் கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியானது. இந்நிலையில், ஓடிடியில் வெளியாகி உள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா, டென்ட் கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் தளங்களில் கண்டுகளிக்க முடியும்.