“ஷிஹான் ஹுசைனி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது 4 நாட்களுக்கு முன்புதான் எனக்கு தெரியவந்தது. சிகிச்சைக்காக அவரை வெளிநாடு அனுப்ப தகுந்த ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்று கூறியிருந்தேன். வரும் 29ம் தேதி சென்னையில் ஹுசைனியைப் பார்க்க முடிவு செய்திருந்தேன். இதற்கிடையில், அவரின் இறப்பு செய்தியை கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கூறியுள்ளார்.