பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசப்படும் என தொடர்ந்து அவர் பேசிவருகிறார். இந்நிலையில் இஃப்தார் நோன்பு விழாவில் பங்கேற்க இபிஎஸ் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும், எஸ்.பி.வேலுமணி, கே.பி. முனுசாமி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் அதிமுக தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லி செல்வது பாஜகவுடனான கூட்டணி முன்னெடுப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.