போலீசாரை கண்டித்து பெண்கள் அகல் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

71பார்த்தது
தாழக்குடி அருகே கடந்த 15 ம் தேதி நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரில் 40 பேர் மீது எஸ்சி, எஸ்டி சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் காவல் துறையினர் சம்பவத்தில் ஈடுபடாத இளைஞர்கள் மீதும் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி, வழக்கை உடனே விசாரித்து ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (19-ம் தேதி) தாழக்குடி சந்திப்பில் உள்ள முப்பிடாரி அம்மன் கோயிலில் 300 க்கும் மேற் பட்ட பெண்கள், 200க்கும் மேற்பட்ட ஆண்கள் அகல் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தாழக்குடி இளைஞர்கள் மீது காவல்துறை பதிந்துள்ள வழக்கில் நீதிகிடைக்கும் வரை அம்மன் கோயிலில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும், படித்துவரும் இளைஞர்கள் மீது எதிர்காலம் பாதிக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையை கண்டிக்கிறோம் என தெரிவித்தனர்.

தாழக்குடி பேரூராட்சி பகுதியில் அனைத்து சமுதாய தலைவர்கள், காவல்துறை, வருவாய்து றையினர் குழு அமைத்து பிரச்னைக்கு பேசி தீர்வு காண வேண்டும். இல்லை யெனில் வருகிற 30 ம் தேதி இதுகுறித்து சென்னையில் காவல்துறை தலைவர், உள் துறை செயலாளரையும் சந்தித்து மனு அளிப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி