நாகராஜாகோவில் விநாயகர் சிலை ஊர்வலம் சொத்தவிளை கடலில் கரைப்பு

74பார்த்தது
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்றும், நாளையும் கரைக்கப்பட உள்ளது. இந்து மகாசபா சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று (14-ம் தேதி) மாலை டெம்போக்கள், லாரிகளில் நாகர்கோவில் நாகராஜாகோயில் திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி வடசேரி சந்திப்பு, மணிமேடை, மணியடிச்சான் கோயில் சந்திப்பு, மீனாட்சிபுரம், கோட்டார் காவல் நிலைய சந்திப்பு. சவேரியார்கோயில் சந்திப்பு வழியாக சொத்தவிளை கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

இந்த ஊர்வலத்தை இந்து மகாசபை தலைவர் பாலசுப்ரமணியன் துவக்கிவைத்தார். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறுவதையொட்டி போலீசாரும் பெருமளவில் குவிக்கப் பட்டு இருந்தனர். நாளை இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி